நாய்கள் - தொடர்ச்சி 2

தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க ஏற்பாடுகள் செய்து கொள்வது ஒரு தொடர் நிகழ்வு. அடுத்ததாக, ட்ரெய்னிங். மூன்று மாதங்கள் வயதாகிய நாய்க்குட்டிக்கு கட்டாயமாக ஒரு நல்ல பயிற்சியாளர் வைத்து பயிற்றுவிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 2 மாதங்கள், சுமார் இருபது வகுப்புகள் பயிற்சியாளரை வைத்து நடத்துவதும், அவரிடம் கேட்டறிந்து கொண்டு தினமும் நாமும் பயிற்சி தர வேண்டும். அப்போதுதான் நம்வீட்டு நாய் நம் கட்டுபாட்டில் இருக்கும்.
உணவை பொறுத்தவரை பலர் பலவகை உணவுகளை போடுவார்கள். மூன்று மாதங்கள் வரை பால், ceralac, நன்கு குழைவாக வடித்த சோறு கலந்து போடலாம்.கேழ்வரகு கூழ் பால் கலந்து இரண்டு வேளைகளாவது கொடுக்க வேண்டும். கட்டாயமாக கால்சியம்,விட்டமின் D3 கொடுக்கவில்லையெனில் கால்கள் வளைந்து விடும்.நாயால் நடக்கக் கூட முடியாமல் போய்விடும்.இரண்டாவது மாதம் தொடங்கிய உடனேயே கால்சியம் தொடங்கி ஐந்து மாதங்கள் வரையிலாவது கொடுத்து வந்தால் முன்னங்கால்கள் கவட்டிக்கால்கள் ஆகாமல் தடுத்து விடலாம். இது நம்ப ஊர் நாய்களுக்கும் பொருந்தும்.

மிக மிக முக்கியம் : நாய்க்குட்டிகளை பலி வாங்கும் ஒரு வைரஸ் தொற்று "பார்வோ"Parvo virus. தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இன்னும் வரும் ...

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...