நாய்கள் - தொடர்ச்சி 4

உண்ணிகளுக்கு ஒரு முடிவு கட்டிய பிறகு பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அடுத்ததாக தடுப்பூசிகள். சிறு குழந்தைகளுக்காக நாம் வைத்துக் கொள்ளும் மெடிக்கல் டயரி போன்ற அட்டையை முதல் ஊசி போடும் போதே நமது கால்நடை மருத்துவர் கொடுத்து விடுவார். அவருடைய தொலைப்பேசி/கைப்பேசி எண்களை கட்டாயமாக குறித்து வைக்க வேண்டும். அவருடைய அறிவுரைப்படிதான் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். வயிற்றில் பூச்சி வருவது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம்.  நாம் பார்க்க வேண்டியதெல்லாம் நமது செல்லப்பிராணி நான்கைந்து தடவை சிறுநீர் கழிக்கிறதா ஒரு முறையோ இருமுறையோ மலம் கழிக்கிறதா, மிகவும் முக்கியமாக மலம் கெட்டியாக போக வேண்டும். கைவசம் ஒரு சில முக்கிய மருந்துகள் வைத்திருப்பது அவசியம். மிகவும் முக்கியமாக பேதி தடுப்பு மற்றும் வாந்தி தடுப்பு மருந்துகள் இருக்க வேண்டும். ஏனென்றால் குட்டி நாய்கள் இயற்கையாகவே எதையாவது கடித்துக் கொண்டிருக்கும். சின்ன சின்ன பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி விடும். அவைகள் ஜீரணம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கிவிடும். வெளியே நடைபழகும் போது Mouth guard போட்டு கூட்டி செல்லலாம் ஆனால் வீட்டில் சற்று கவனம் தேவை. உணவு விஷயத்தில் ஒவ்வொரு இன நாய்களுக்கும் குணாதிசியங்கள் மாறுபடும்.
  லாப்ரடார் வகைகள் பாத்திரத்தில் உள்ள உணவை தேவையான அளவிற்கு மேல் சாப்பிட்டு விட்டு கக்க ஆரம்பித்து விடும். டாபர்மேன்,GSD,ராட்வீலர், ராஜப்பாளயம் போன்றவை சாப்பிடும் போது அருகில் சென்றால் உறுமும். குட்டி பருவத்திலேயே சாப்பிடும் பொழுது தடவி கொடுத்தும் சிறிதுசிறிதாக உணவு போட்டும் பழக்கி விட்டால் பெரிதானவுடன் கடி வாங்காமல் தப்பிக்கலாம்.  25 நாட்கள் முதல் 45 நாட்கள் வயதான குட்டிகளை கொண்டு வந்து வளர்ப்பதுதான் சிறந்த வளர்ப்பு முறையாகும். 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வயதான குட்டிகளையும் வளர்க்கலாம் பொறுமையும் கவனமும் சற்று கூடுதலாக தேவைப்படும். பொதுவாக நாய்களுக்கு 18 நகங்கள் மட்டுமே இருக்கும். 20 மற்றும் 22 நகங்களும் இருக்கும். முதலாளியின் உயிரை காப்பாற்ற தம் உயிரையும் கொடுக்கக் கூடியவை 20,22 நகங்கள் உள்ள நாய்கள் என்று சொல்வார்கள், அது உண்மை என்று சொல்லும்படி இரண்டு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு நாய்கள் என் உயிரை காப்பாற்ற தம்மை தியாகம் செய்த நிகழ்வுகள் உள்ளன. கன்னிவகையை சேர்ந்த Beauty என்ற 22 நகங்கள் உடைய நாயும், 20 நகங்கள் இருந்த டாபர்மேன்  இன "தம்பி" ஐ யும் வாழும் வரை மறக்க முடியாது. அவை இரண்டுமே Bonded dog அல்லது One man dog என்று சொல்லலாம். நாய்க்குட்டிகள் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்தால் மற்றும் நமது கால்களில் தம் உடம்பை சேர்த்து கொண்டு நின்றால் அவைகள் Bonded நாய்களாக இருக்கும். மற்றவர்களின் கட்டளைகளுக்கு கீழப்படிதல் கடினம். வீட்டில் இருக்கும் மற்றவர்களின் அன்புகட்டளைகளை கேட்கும் ஆனால் அடிபணியாது.
கீழே இருக்கும் புகைப்படம் Great Dane ல் ஹேர்லி க்யின் என்றழைக்கப்படும்.

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...