நாய்கள் - தொடர்ச்சி 1

நாய்களை பற்றி பலப்பல செய்திகளை பகிர்ந்து கொண்டே போகலாம்.
நாய்க்குட்டிகளை எப்படி தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு இன நாய்க்குட்டியையும் தேர்ந்தெடுக்க வெவ்வேறு முறைகள் உள்ளன. வெளிநாட்டு ரகங்களுக்கு என்று பல சட்டத்திட்டங்கள் கடைப்பிடிக்க படுகின்றன. முதலில் தாய் நாயின் பூர்வீகம் தந்தை நாயின் பூர்வீகங்கள் அலசி ஆராயப்படும். தந்தை எந்த ஊர்,எங்கிருந்து அழைத்து வரப்பட்டார், அவருடைய பெற்றோர்களுக்கு எந்த ஊர்,பதிவு விபரங்கள், கலந்துக் கொண்ட போட்டிகள் முதலியவைகளை ஆராய்ந்து, தாய் நாயின் விபரங்களும் ஆராயப்படும். பிறகு பிறந்த இனத்தின் குறைப்பாடு உள்ளதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, GSD க்கு பின்னங்கால்களில் பலம் சற்று குறைவாகவும் இடுப்பெலும்பு பலவீனமாகவும் இருக்க வாய்ப்பதிகம், எனவே கால்நடை மருத்துவரின் ஆலோசனை தேவை. நாய்க்குட்டிகளை வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல. நேரம்,இடவசதி,சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனத்தில் வைத்துக் கொள்வது மிகமிக அவசியம். குட்டியாக இருந்த நாய் வளர்ந்தவுடன் சமாளிக்க முடியாமல் பிறரிடம் கெஞ்சி இலவசமாக எடுத்து கொள்ளுங்கள் என பலர் கேட்டது நினைவில் உள்ளது. சிறிய குட்டிகள் அழகாக இருக்கும், விளையாடுவதில்,பாலும் ரொட்டியும் போடுவதில் சிரமம் இருக்காது. GSD வைத்துக் கொள்ள வேண்டுமெனில், சுமார் 10X10 இடம் அதற்கென்று ஒதுக்க வேண்டியது அவசியம்.ஏனென்றால் அவைகள் பெரியதாகவும் எடை அதிகமுள்ளவை. இந்த வகை நாய்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், நுன்னறிவு படைத்தவைகளாகவும்,மிகவும் தைரியம் படைத்தவைகளாகவும் இருப்பதனால், அனைவருக்குமே பிடிக்கும். காவல்துறை, இராணுவம் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இவற்றின் தேவைகள் அதிகம். வீடுகளில் பராமரிப்பது சற்று சிரமம். தினமும் காலை மாலை உடற்பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியம். நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். நடை பழக்க வேண்டும். உணவிற்கு பின் வெளியில் சென்று மலஜலம் கழிக்க பழக்க வேண்டும். வீட்டிற்கு வரும் குழந்தைகள் மேல் கால் வைக்காமலும் கவ்வாமலும் இருக்க பழக்க வேண்டும். அவ்வப்போது தடுப்பூசிகள் போடவேண்டும். மனிதற்களை போல் தினசரி குளியல் தேவையில்லை. ஆனால் வாரம் ஒருமுறையோ 15நாட்களுக்கு ஒரு முறையோ குளிக்க வைக்க வேண்டும். நாய்கள் புழங்கும் இடங்களில் முடிகள் விழும் ,எனவே தூய்மை அவசியம். சாலைகளில் அலைந்து திரியும் நாய்களிடமிருந்து தொற்று மற்றும் உண்ணிகள் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். ஏனென்றால் உண்ணிகள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் குடியேறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.இந்த செய்திகள் அனைத்தும் எல்லா வகை நாய்களுக்கும் பொருந்தும். நாய்கள் படுக்கும் இடங்களில் பிஃனாயில் போன்றவைகளை தெளித்தால் நாய்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். சாதாரணமான ஷாம்புகளை தெளித்து கழுவி விடலாம். சுவர் ஓரங்களில் குழந்தைகளுக்கு போடும் பௌடர்களையோ உண்ணி தடுக்கும் பௌடர்களையோ தூவி விடலாம். 
இன்னும் வரும் ....துளிகள்

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...