Saturday, 10 June 2017

ஏன் பிறந்தேன் 5

விவசாயம், வெளியில் இருந்து பார்க்கும் நம்மை போன்ற பலருக்கும் மிகவும்
எளிதாக தோன்றும். நேசிப்பவர்க்கு மிகவும் எளிதுதான்.பழைய நடைமுறைகளை சற்று அலசி ஆராய வேண்டியது அவசியம். கூடவே சமக்காலத்திற்கு ஏற்ற நல்ல திட்டம் வகுப்பது மிகவும் அவசியம்.
      அன்றைய காலகட்டத்தில் வருடாவருடம், ஒவ்வொரு நிலத்தின் வரைபடத்தையும் வைத்து அதிலுள்ள குறைபாடுகள் அளவு நிறைகள் போன்றவற்றை குறித்து வைத்து அடுத்து வரும் வருடங்களில் சரி செய்வது வழக்கம். எடுத்துக்காட்டாக, ஒரு விளைநிலத்தில் இந்த வருடம் நீர்க்கட்டி பின் வடிகட்டினால், எந்தந்த இடங்களில் நீர் தேங்கியுள்ளது எங்கெங்கு மேடு தட்டியுள்ளது என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதை சரி செய்வார்கள்.  நாற்றங்காலில் மட்டப்பலகை போடுவது போன்றே ஏற்றஇறக்கங்கள் சரி செய்யப்பட்ட நிலங்களிலும் போடப்படும்.அப்போதுதான் மகசூல் குறையாது. கோடைமழை பெய்தவுடன் கோடைப்புழுதி என்ற உழவு பிறகு தண்ணீர் வந்தவுடன் உழவு. பின் சேறு லாவி, மட்டப்பலகை அடித்து நிரவி பிறகுதான் நடவிற்கு நிலம் தயார் ஆகும். இவற்றுள் எதுவுமே செய்யஇயலாத போது நேரடியாகவே கைத்தெளியலாக விதைநெல்லை தெளிப்பார்கள்.




1 comment:

Anonymous said...

இன்னும் எழுதுங்கள் இதுவொரு ஆரம்பம்

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...