நாய்களை பொறுத்தவரை உண்ணிகள் ஒரு சாபம் என்றே சொல்லலாம். முக்கியமாக இரண்டு வகை உண்ணிகள் நம்மூரில் அதிகம். ஒன்று பழுப்பு நிறத்தில் தட்டையாக இருக்கும் மற்றது கருமை அல்லது சாம்பல் நிறத்தில் உருண்டையாக இருக்கும். இரண்டுமே காதுகளுக்குள் கால்விரல் இடுக்குகள் கழுத்து மற்றும் கால் இடுக்குகளில் இருக்கும். ஆகையால் கூடியவரை வாரம் ஒரு தடவையாவது கால் விரலிடுக்குகள் காதுகளுக்குள் அழுக்கு சேராதபடி பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் நனைத்து துடைத்து விட வேண்டும். முடி அதிகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் உபயோகப்படுத்தும் பேன்சீப்பு போன்று நாய்களுக்காகவே இருக்கும் உலோக சீப்பை உபயோகித்து சுத்தமாக வாரி விட வேண்டும். சிறிதளவு ஆலிவ் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ரோமத்தில் பூசி விடலாம். உண்ணிகள் வராமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. வந்து விட்டால் உடனடியாக கட்டுபடுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். இல்லையெனில் நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும். ஒரே வாரத்தில் ஒன்று பலவாகி நம் வீட்டுச்சுவர்களில் குடித்தனம் நடத்த ஆரம்பித்து விடும். உணவில்லாமல் மாதக்கணக்கில் கூட உயிர் வாழக்கூடியவை. பழுப்பு நிற உண்ணிகள் வீட்டின் உள்ளே வருவது மட்டுமல்ல நம் மீது ஏறி நாம் அறியாமல் நம் தோலின் உள்ளே நுழைந்து வாழ ஆரம்பித்து விடும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அதிக கவனமும் எச்சரிக்கையும் மிகவும் அவசியம். ஏனென்றால் பலவகையான நோய்களை எதிர்க்கொள்ள நேரிடும். Google ல் Ticks என்று தேடினால் மேலும் பல செய்திகள் கிடைக்கும். இதுவொரு எச்சரிக்கை செய்தியே தவிர பயமுறுத்தல் அல்ல.
Parvo virus பற்றி தொடரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
Parvo virus பற்றி தொடரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment