நாய்கள் - தொடர்ச்சி 5

நாய்க்குட்டிகளுக்கு பயிற்சி தொடங்க நான்கு மாதங்கள் ஆக வேண்டும் என்பது பொதுவான கருத்து ஆனால் குட்டிகள் நம்மோடு விளையாட ஆரம்பித்த உடனேயே பயிற்சிகளை தொடங்கி விடுவதுதான் நல்லது என்பது எனது கருத்து. அப்போதுதான் நம்முடைய ஆணைகளை உடனடியாக கேட்க ஆரம்பிக்கும். அதே போல் அடித்தும் கழுத்தில் நெருக்கும் சங்கிலியிட்டும் பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் வளர்த்த நாய்க்குட்டிகள் கழுத்து சங்கிலி இல்லாமலேயே நடை பயிற்சியில் வரும். சாதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் வார்த்தைகளைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவை. பல வருடங்களுக்கு முன் 65 நாட்களே ஆன "பப்பி" என்ற டாபர்மேன் குட்டிக்கு பந்து எறிந்து பிடிக்கும் பயிற்சியளிக்கும் போது கால்சறுக்கி அய்யோ என்ற சப்தத்துடன் கீழே விழுந்தேன், பந்தை பிடிக்க ஓடிய குட்டி அதே வேகத்தில் என்னை நோக்கி வந்து தவித்த காட்சி இன்றளவும் மறக்க இயலாது. அந்த பப்பி எங்கள் வீட்டில் 14 வருடங்கள் இருந்தது. குழந்தைகள் மேல் கால் வைக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் யார் மீதும் பல் பட்டு விடக்கூடாது என்று கவனத்துடன் இருக்கும். எங்கள் குழந்தைகள் அதன் வாயின் உள்ளே கைவிட்டாலும் காயம் ஏற்பட்டதே கிடையாது. டாபர்மேன் காவலுக்கு மட்டும்தான் வீட்டில் வளர்த்தால் கடிக்கும் என்ற பயம் தேவையில்லை. அன்பும் கண்டிப்பும் இருந்தால் நமது விருப்பத்திற்கு ஏற்றபடி நாய்களை வளர்க்க முடியும்.

பார்வோ வைரஸ் என்பது காற்று வழி பரவும் தொற்று. இது சிறு குட்டிகள் முதல் ஒரு வயது வரை அதிகம் தாக்கும். நாய்க்குட்டிகள் வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கும். இரத்தம் கலந்த பேதியாகும். Gastritis ஏற்பட்டு நாய்களால் சாப்பிட முடியாது. ORH எனப்படும் Oral Re Hydration ஓரளவிற்குதான் தாக்குப் பிடிக்கும். கவனிக்காமல் விட்டுவிட்டால் நாயை மறந்து விட வேண்டியதுதான். எனவே செலவைப் பற்றி கவலைப்படாமல் "பார்வோ" தடுப்பூசி போட வேண்டும்.
மனிதர்களுக்கு வைரல் காய்ச்சல் வந்தால் ஐந்து நாட்கள் ஆட்டிப் படைப்பது போல் நாய்களுக்கு வந்தால் 7 - 10 நாட்கள் வரை இருந்து உயிரை குடிக்கும். நோய் சரியாக போனாலும் வாய் முதல் குதம் வரை உள்ள ம்யூகஸ் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வெளியே தள்ள பட்டிருப்பதனால் அவை வளரும் வரை நாய்களால் பால் கூட குடிக்க முடியாது.  கிட்டதட்ட 15 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

இன்னும் வரும் ......

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...