Sunday, 18 June 2017

ஏன் பிறந்தேன் - 6

விவசாயம், மாடுகள், நாய்கள்,குதிரைகள்,ஆடுகள், கோழிகள் என்று இன்னும் நூறாண்டுகள்
எழுதினாலும் முற்றுப்பெறாது. குதிரைகளைப் பற்றி சிறிதளவாவது குறிப்பிடவில்லையெனில் நிறைவிருக்காது. மாடுகள் வளர்க்க மாட்டுவாகடம் போன்றே நம் ஊரீல் குதிரைவாகடம் உள்ளது. அடிப்படையான ஒரு சிலவற்றை பகிர்வதில் தவறிறுக்காது.
புறாக்களுக்கு எத்தனை நிறங்களோ அந்த அளவு குதிரைகளுக்கும் நிறமுண்டு. கருமை,வெண்மை,சிகப்பு, பழுப்பு போன்றவை அடிப்படை நிறங்களாகும். மனிதனைப்போல வர்ணாசிரப் பிறிவும் உண்டு. பெண்களை வகைப் படுத்துவதை ப்போல் வகைகளும் உண்டு.சுழிகளை வைத்தும் வகைப்படுத்துவதும் வழக்கம். காற்லிகா,அற்லிகா,குளிகா,காஜா,மாக்கா,
சிங்கா,ஊளீகா,லெங்கினி,பெஸ்கி என்று ஒன்பது வயது. இன்றுள்ளவர்களுக்கு இவைகளை புரிய வைப்பதும் எளிதல்ல.ஓரளவிற்காவது குதிரைகள் மேல் ஆசையும் அன்பும் இருப்பவர்களுக்கும் தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் தொடர்பு கொண்டால் இலவசமாகவே சொல்லித்தர முடியும்.இந்திய குதிரைகளில் மார்வாரி இனம் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இவற்றின் அழகே வளைந்த கழுத்தும் பிடறியும் வேகமும்தான். அரேபிய ரகம், ஆஸ்திரேலிய ரகங்கள் உயர்வானவையே. நம் ஊர் குதிரைகளை வண்டிகளுக்கும் சவாரிக்கும் மட்டுமே பயன் படுத்துவோம்.  மற்ற நாடுகளில் அனைத்து வேலைகளுக்கும் பயன் படுத்துவது வழக்கம். தவிரவும் இறைச்சி உணவாகவும் பயன் படுத்துவார்கள்.நம்ப ஊருக்கு ஒத்து வராது. 20,30 வருடங்களுக்கு முன்பே சராசரியாக ஒரு லட்ச ரூபாய் விலை போன குதிரைகள் இன்றைய சந்தை மதிப்பில் நாலைந்து லட்சங்கள் முதல் கோடிகளில் விலை போவதாக கேள்வி. பல லட்சங்கள் கொடுத்து குதிரையை வாங்கி லாயம் அமைத்து, லத்திகளை அள்ளி, புல்லறுக்க சொல்லி, கொள்ளு வேகவைத்து கட்டி,நீண்ட சவாரிக்கு பின் புரளவிட்டு, புளியிலை சுடுநீர் அடித்து, சளி பிடிக்காமல் துடைத்து விட்டு மாதம் ஒரு முறை லேப்படித்து, பூண்டு தும்பைசாறு நாசியில் விட்டு, தினமும் நீச்சலடிக்க விட்டு வைத்து கொள்ள வேண்டும். புல்வெளிகள் குறைந்த நிலையில் நீர்நிலைகளில் வெடிப்பு கண்ட நிலையில், நிறைய பேர் குதிரைக்கு பதில் மோட்டார் வாகனங்களுக்கு தாவி விட்டார்கள். இவற்றையெல்லாம் தாண்டி இன்றும் பல ஊர்களில் ரேக்ளா பந்தயங்களுக்காக குதிரைகள் வளர்ந்து வருகின்றன. அந்த மக்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகட்டும்.

வளரும் ....




No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...