Tuesday, 27 June 2017

ஏன் பிறந்தேன் - 7

குதிரை என்றதும் சிறுவயது நினைவிற்கு வருகிறது. சிறுவயதில் ராணி என்ற பெயர் கொண்ட குதிரை என் மாமா வீட்டில்
இருந்தது.  நான் அதன் காலடியில் விளையாடிக் கொண்டிருந்ததாக இன்றும் எனது தாய்மாமன் அடிக்கடி சொல்வதுண்டு. தாய்வழி அன்பு என்பது மிகவும் அதிகமாக உண்டு. கீழத்தஞ்சையில் இன்றும் பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு புகழ் பெற்றவர்கள். அப்போதெல்லாம் "சாமியார் " என்ற ஒருவர் வருடத்தில் மூன்று மாதம் வந்து தங்குவார். விடியற்காலை வேளைகளிலும் மாலை வேளைகளிலும் குத்துவரிசை சொல்லிக் கொடுப்பார். வேடிக்கை பார்த்து கற்றுக் கொண்டோம், அவர் சொல்லிக் கொடுத்ததும் அதிகம். பார்க்கவும் பழகவும் மிகவும் எளிமையானவர். பாடத்தில் எப்போது சந்தேகம் வந்தாலும் உடனடியாக தீர்க்க கூடியவர். இன்றளவும் நினைவில் வைக்க அவர் சொல்லிக் கொடுத்த குத்துவரிசை ஒன்றே போதும். உயிருள்ளவரை பயன் உள்ளவை. இத்தருணத்தில் அந்த நல்லாசிரியருக்கு வணக்கங்கள் உரித்தாகட்டும். எனக்கு சிலம்பு வரிசை ஆசானாக இன்றளவும் இருப்பது "மீசைய்யா" என்றழைக்கப் பெறும் என் தாய் மாமன்தான்.பெரியவர் மாட்டுவாகடத்தை கரைத்து குடித்தவர் என்றால் இவரை குதிரை வாகடம் எழுதியவர் என்று சொல்லும் அளவிற்கு ஞானி. மாடுகள் பற்றியும் குதிரைகள் பற்றியும் சிறுவயது முதற்கொண்டே சிறிது சிறிதாக சொல்லிக் கொடுத்தவர்கள். மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் எந்த நிலையிலும் அச்சம் கொள்ளாமல் எதிர் கொள்ளும் துணிவை கற்று தந்தவர்கள் என்னுடைய தாய்மாமன்கள் நால்வருக்கும் இந்த பதிப்பு சமர்ப்பணம்.




No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...