நாய்கள் மனிதனின் சிறந்த நண்பனாக பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. வேட்டையாடவும் காவல் வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட நாய்கள் இப்போது மோப்பம் பிடிக்கவும் ஆபத்து சமயங்களில் காப்பாற்றவும் பயன் படுகின்றன. உலகத்தின் பலம் வாய்ந்த நாடென கருதப்படும் நாட்டில் உள்ள கென்னல் க்ளப் 274 நாய் வகைகளை மட்டும் அங்கிகரித்து தாங்கள் நடத்தும் நாய் கண்காட்சிகள் மற்றும் போட்டிகளுக்குள் அனுமதிக்கின்றது. ஆனால் குறிப்பிடப்பட்ட 274 வகைகளில் உலகத்தின் மிக பெரிய குடியரசான இந்திய துணைகண்டத்தில் இருந்த இருக்கின்ற நாய் வகைகள் எதுவுமே இடம் பெறவில்லை. அதற்கான காரணம் அலசி ஆராய்ந்தால்தான் புரிய வரும். இது இப்படியே இருக்கட்டும். முதலில் நம் தமிழகத்தில் இருந்த ஒரு சில வகைகளை பற்றி பார்ப்போம். பெருவாரியான ரகங்கள் தென் மாவட்டங்களிலேயே உள்ளன. புலியுடன் சண்டையிடக் கூடிய கோம்பை இனமும் உயிரைக் கொடுத்து எஜமானனையும் அவன் வீட்டையும் காத்து நிற்கும் ராஜபாளையம் வகையும் காவலுக்காக பயன் படுத்தப்படும் அலுங்கு என்ற இனமும் வேட்டைக்காக பயன் படுத்தப்படும் கன்னி, சிப்பிப்பாறை மற்றும் மஞ்சகாலி என்ற இனமும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத இனங்களாகும். இவற்றை தவிர இன்னும் மாவட்ட வாரியாக பல இனங்கள் உள்ளன.
நம் தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் நிலவும் தட்பவெப்பநிலைகளை தாங்கி, நமது உணவு பழக்கத்திற்கு தக்கபடி தம்மை மாற்றிக்கொண்டு நமது வீடுகளில் இருக்கக்கூடியவை. இன்னுமொரு சிறப்பும் உண்டு. பொதுவாக நாய்களை தாக்க கூடிய நோய்களில் இருந்து தம்மை காத்துக் கொள்ளும் திறம் படைத்தவை. இரக்குமதி செய்யப்பட்ட நாய்களான ஜீஎஸ்டீ,டாபர்மேன் பின்ஸ்ச்சர், லாப்ரடார் வகைகள் க்ரேட் டேன், பாக்ஸர், ராட்வீலர்,டாச்ஸ்ஹூன்ட் ,பீகிள்,புல்மாஸ்டிப்,ஆஃப்கான் ஹூன்ட், திபேத்யன் மாஸ்டிப்,ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட் இன்னும் பற்பல ரகங்கள் உள்ளன. ஒரு செயின்ட் பெர்னார்ட் வளர்க்க செய்யப்படும் செலவு நம்ப ஊர்ல 20 குடும்பம் வயிறு நிறைய சாப்பிட ஆகும் செலவை விட சற்று அதிகமாகதான் இருக்கும். நம்ப ஊர் நாய்களுக்கு இறைச்சி போட வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் புரதசத்து உள்ள உணவை முகர்ந்து பார்த்தே எடுத்துக்கொள்ளும். எனவே ரெடிமேட் உணவுகளுக்கும் மருத்துவத்திற்காக செய்யும் செலவு மிக மிக குறைவே. இவற்றை தவிர இனச்சேர்க்கைக்கும் பேறுகாலத்திற்கும் குட்டிகள் ஈன்ற பின்னும் செய்யப்படும் பணச்செலவும் நேரச்செலவும் அதிகம்தான். ஆனால் நாட்டு ரகங்களுக்கு இந்த அனாவசிய விரயங்கள் மிக மிக சொற்பமே. வெளிநாட்டு நாய்களுக்கும் நாட்டுநாய்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி சொல்வதற்கான கட்டுரை இதுவல்ல. நாய்கள் வளர்ப்பது என்பது ஒரு கலை, அதில் ஐயமில்லை. ஆனால் நாட்டு இன கோழிகளையும் மாடுகளையும் மெதுவாக அகற்றிவிட்டு கலப்பினங்களை நுழைத்து விட்டது போல நாட்டுநாய்களும் அகற்றப்பட்டுள்ளனவோ என்ற ஐயப்பாட்டின் வெளிப்பாடே இது என்று கூட சொல்லலாம்.

No comments:
Post a Comment