உலகில் பிறப்பும் இறப்பும் மிகவும் சகஜமாக நடந்துக்கொண்டிருக்கின்ற ஒரு இயற்கையான நிகழ்வு.
தமிழ் மண்ணில் தஞ்சை மாவட்டத்தில் இன்று மாவட்ட தலைநகராக திகழும் திரு-ஆருர் அருகே விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் எனது இந்த பிறப்பு நிகழ்ந்தது. தந்தை வழியில் மிக பெரிய பணம் படைத்த குடும்பம். 50களிலேயே Morris minor, Baby Austin, HM போன்ற கார்களையும் சொந்த உபயோகத்திற்காக பிஸ்டல் துப்பாக்கியையும் மின்வசதி இல்லாத கிராமத்தில் ஒட்டுக்கட்டிடமும் மாடியில் தனக்கென்று ப்ஃளஷ் அவுட்டும் வீட்டீன் உள்ளே அடுக்களை, குளியலறை மற்றும் பிற இடங்களில் இப்போதுள்ள திருகு குழாய்களும் மின் விசிறியாக பங்காவும் மாலை நேரங்களில் பொருத்தப் படும் வீடு முழுக்க வெளிச்சம் போடும் மோஸ்தர் விளக்குகளும் வீட்டைச் சுற்றி 100கணக்கான தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் மா மரங்களும் கொய்யா மரங்களும் அருகேயே இவற்றிற்கு நீர் இறைக்க ஒரு சொந்த குளமும் வைத்திருந்த குடும்பம். என் வயது பிள்ளைகள் பிஸ்கெட்டுகளையும் மற்ற மிட்டாய்களையும் கற்பனை கூட செய்திராத போது விதவிதமான குக்கீஸ்களையும் வெண்ணெய் மணம் வீசும் பிஸ்கெட்டுகளையும் வீட்டில் செய்யப்பட்ட ஐஸ்க்ரீம், பாலில் செய்யப்பட்ட தில்குஷ்,ஸ்ரீகண்ட் போன்றவைகளை விடுமுறை நாட்களில் உண்டு மகிழ்ந்த குடும்பம்.
விதவிதமான உணவுகள் சமைத்து பரிமாற ஒருவர் வீட்டில் பாத்திரங்கள் தேய்க்க ஒருவர் துணிகள் மட்டும் துவைத்து காய வைத்து மடித்து வைக்க ஒருவர், வீட்டு உபயோகத்திற்கென இருந்த கறவை மாடுகளை கறக்க ஒருவர் என பலர் இருந்தனர். இதை தவிர டெப்போவிற்கு பால் சப்ளைக்கென பல மாடுகள், பாரவண்டி,வில்வண்டி, உழவு மாடுகள், காளைகன்றுகள், கிடேரிகள் என மாடுகள் மட்டுமே நூற்றைம்பது இருக்கும். வில்வண்டி முழுவதும் தேக்கால் செய்யப்பட்டது, நுகத்தடி மட்டும் நுனாமரம், எடை இருக்காது மாட்டிற்கு கழுத்து வலிக்கக்கூடாது. சக்கரங்களில் மெலிதான மூன்றல்லது நான்கு இன்ச் கனமான ரப்பர் டயர் ஒட்டப்பட்டு,பார் என சொல்லப்படும் ஆக்ஸிலில் உராய்வு குறைவாக இருக்க சக்கரங்களில் Ball bearing பொருத்தப்பட்டு இருக்கும். வண்டியில் வில் வடிவத்தில் இரண்டு பக்கங்களிலும் Load spring ம், கூண்டின் உள்ளே பெரம்புகள் வளைக்கப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும்.கூண்டின் பக்கங்களில் விளக்குகள் மாட்ட கொக்கிகளும் அலங்காரமான தட்டு பலகையும் ஏற வசதியான படிக்கட்டு பிடித்துக் கொண்டு ஏற கைப்பிடிகள் பொருட்கள் வைக்க பின்பக்கத்தில் பெட்டியும் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பணம் போன்றவைகளை பத்திரப்படுத்த ரகசிய அறைகளும் உள்ளே இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வில் வண்டி செய்ய பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ஆகியதாக நினைவு. இந்த வண்டியில் பூட்டுவதற்காக பூரணி எனப்படும் மேற்கத்திய மாடுகள். இரண்டும் ஐந்து ஐந்தறையடி இருக்கும். கொம்புகளே நாலு சாண் இருக்கும். அந்த கொம்புகளில் கொப்பிகள் போடப்பட்டிருக்கும். வெங்கல கொப்பிகள்.சவாரிக்கு முன்பாக கொப்பிகளுக்கு பிராஸோ பாலீஷ் போட்டு பளபளக்கும். கழுத்தில் போட கொத்து சலங்கைகள். தோலால் ஆன பட்டையில் நான்கு மணிகளும் மூன்று சலங்கைகளும் தைக்கப்பட்டிருக்கும். அடியில் உள்ள சலங்கை மட்டும் ஹல்லர் வகையாகும். ஒரு மைல் தூரத்திலேயே சலங்கை சப்தம் கேட்கும்.இது முதலாளி தனியாகவும் குடும்பத்துடன் செல்லும்போது உபயோக படுத்த. மாலைநேரங்களில் செல்ல பட்டறை என சொல்லப்படும் ரேக்ளா வண்டியும் வொம்பளச்சேரி மாடுகளும் அவற்றிற்கென நடுத்தர மூன்று சலங்கை இரண்டு மணி உள்ள கொத்து சலங்கைகள் போடப்படும். பொதுவாக கீழதஞ்சையில் காளைகன்றுகளுக்கு பல் காணும் போதே காய்பிடித்து,காதறுத்து,கொம்பு தீய்த்து சூடு வைத்து விடுவார்கள். எனவே கொப்பிகளுக்கு அவசியம் இல்லை.
வண்டியின் பிரதாபம் இப்படி இருக்க, மாடுகளைப் பற்றியும் துளியோண்டு எழுத வேண்டும். ஓங்கோல் காளைகளும் காங்கேயம் காளைகளும் எவ்வளவு ப்ராபல்யமோ அந்த அளவிற்கு இன்றளவும் பேசப்படும் காளைகள் வொம்பளச்சேரி இனமாகும். காளைகளின் லட்சணங்களான நாலுகால் வெள்ளை,நெற்றி வெள்ளை,வடிவால் வெள்ளை,வேண்கால்கள், காய்கருப்பு,சிறுமுகம், சுழிசுத்தம் என பல்வேறு குறிப்புகளுடைய காளைக்கன்றுகளைதான் காளை என தீர்மானிப்பார்கள்.இந்த விஷயத்தில் கூடிய வரை கவனமாக இருப்பார்கள். கூடிய வரை பூரான் சுழியையும் பாடை சுழியையும் தவிர்த்து விடுவார்கள். வொம்பளச்சேரி இனப்பசுக்கள் சினைப்படும்போது ஆகாயத்தை நோக்கும் என சொல்ல கேள்வி. அப்படி என்ன உயர்வு என்று நினைப்பவர்களுக்கான செய்தி. மற்ற வகை மாடுகள் வெளி மனிதர்களை கண்டால் நமக்கென்ன என்றிருக்கும் ஆனால் வொம்பளச்சேரி இன மாடுகள் கட்டுத்தறியில் பழகிய மனிதர்களை தவிர யார் வந்தாலும் ஓசை எழுப்பி ஊரை கூட்டிவிடும்.உரிமையாளன் இல்லாமல் வேற்று மனிதர் வந்து பசுக்களையோ கன்றுகளையோ அவிழ்த்தால் மூக்கணாங்கயிற்றை அறுத்துக்கொண்டு காளைகள் வந்து விடும். பொதுவாக அந்த காளைகளின் துள்ளல்களையும் சீறலையும் எக்காளத்தையும் கண்டவுடன் நாடிகள் ஒடிங்கி விடும்.அந்த காலக்கட்டங்களில் வண்டிமாடுகளை திருடுபவர்கள் பிணைக்காசாக பலநூறுகளை கேட்பார்கள், கேட்ட பிணைகாசை கொடுப்பதில் தவறு ஏற்பட்டால் மேலதஞ்சை மாவட்டத்தில் இருக்கும் முந்திரிகாடுகளுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று முந்திரி எண்ணையை தடவி வெய்யிலில் நிற்க வைத்து விடுவார்கள் என்றும் நாம் ஊர்உலகமெல்லாம் சுற்றிப் போய் பார்த்தால் ரத்தம் சொட்டச்சொட்ட மேல் தோலில்லாமல் மாடுகள் நிற்குமாம். ஒரு ஜோடி உழவுமாட்டை பறிக்கொடுத்தவனுக்குதான் அந்த வலியை உணர முடியும். இதையும் தவிர திருடிய மாடுகளை ஓட்டி வர வால்களில் கத்தரிக்கிட்டி என்ற ஒன்றைப் போட்டு ஓட்டுவார்களாம். அப்படி கிட்டி போடப்பட்ட மாடுகள். மறுபடியும் நம்மிடம் வந்தால் நடக்கக் கூடமுடியாதாம். விவசாயிக்கு மாடுதானே அவசியம். மாடுகள் இல்லையெனில் கோடை உழவு செய்து பயிறு உளுந்து தெளிக்கலாம் என்ற கனவு பாழ்.குறுவை,தாளடி,சம்பா எல்லாமே அடி வாங்கும்.
எனவேதான் கொட்டிலின் கதவோரத்தில் வொம்பளச்சேரி காளையையோ மாட்டையோ கட்டி வைப்பார்கள்.

No comments:
Post a Comment