Tuesday, 6 June 2017

ஏன் பிறந்தேன் 4

கன்றுகளை மெதுவாக நுகத்தடி பழக்கம் செய்து விட்டோம். இதற்கு பிறகு உழவில் பழக்குவது மிகவும் அவசியம். ரொம்பவும் மெனக்கெடாமல் டிராக்டரை வைத்து உழுவது சுலபம்தான் ஆனால் உலகத்திற்கே சோறு போட பல குடும்பங்கள் உழைக்க வேண்டுமே.இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. விவசாயம் என்பது மிகவும் சாதாரணமான வேலை போன்று தோன்றும். மாடுகளை நிறைய வைத்துக் கொள்வார்கள். 





கொல்லைப்புறத்தில் எருக்குழி ஒன்று இருக்கும். 50அடி நீளம் 50அடி அகலம் ஒரு தென்னை ஆழம் இருக்கும். கொட்டிலில் இருந்து மாடுகளின் சிறுநீர் ஓடி அந்த குழியில் விழும் சாணத்தையும் அதில்தான் கொட்டுவார்கள். கூளம் எனப்படும் வைக்கோலும் அதில் சேரும்.  இதைத் தவிர கோடையில் பயிரிடப்படும் நரிப்பயிறு செடிகள் மாடுகள் மேயவும் பிறகு மண்ணிலேயே மிதிப்படும். நைட்ரஜன் வாயுவை தக்கவைத்துக் கொள்ளும் பலச்செடிகளையும் பயிரிடுவார்கள். எருக்குழியில் இருந்து எருவையும் வைகாசியில் அடியுரமாக போடுவார்கள். ஆடுமாடுகள் இல்லாதவர்கள் கிடை கட்டுவார்கள். கோடைக்காலங்களில் மாடுகளுக்கு தேவையான புற்கள் கிடைப்பதற்காகவும் கிடை சேர்ப்பவர்களிடம் விடுவார்கள். ஒரு கிடையில் 40 முதல் 50 பசுக்கள் மற்றும் சினைப்பருவம் வரக்கூடிய கிடேரிகளும் ஒரு காளையும் இருக்கும். மாசிமாதக்கடைசியில் கிடையில் சேரும் மாடுகள் மேய்ச்சல் முடிந்து தேவைப்படுபவர்களின் வயல்களில் அடைக்கப்படும்.இப்படி மேய்ந்து கொண்டே அருகில் எல்லா கிராமங்களையும் சுற்றி ஆனி மாதத்தில் அதனதன் வீடுகளில் சேர்த்து விடுவார்கள்.இதனால் கிடை சேர்ப்பவர்க்கு மாட்டு சொந்தகாரர்களும் தம் வயல்வெளிகளில் கிடை கட்டச் சொல்பவர்களும் மாட்டுக்கு இவ்வளவு என நெல்லும் பணமும் அளிப்பார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கூட நிறைய கிராமங்களில் வாத்துக்கிடை,ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடைகளை தங்கள் வயல்களில் போடுகிறார்கள். 


No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...