Wednesday, 7 August 2024

கத்தரிக்காய்

கத்தரிக்காய்
கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
கத்தரிக்காய் கொத்ஸு
ஸ்டஃப்டு கத்தரிக்காய்
இன்னும் பலப்பல சுவையான சமையல் வகைகள் உள்ளன. 
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நான் செய்யும்
பைங்கன் பர்த்தா எனப்படும் சுட்ட கத்திரிக்காய் மசியல்.
அழகான வைலட் நிற கத்தரிக்காய் எடுத்து நெருப்பில் சுட்டு வைத்துக்கொண்டு, மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெருங்காயம், மிளகாய்த்தூள் தனியாத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வதக்கி, சுட்டு வைத்திருக்கும் கத்தரிக்காய் தோல் நீக்கி நன்றாக மசித்து வானலியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சுமாரான தீயில் வதக்கவும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை சேர்த்தால் வேலை முடிந்தது.

Tuesday, 26 April 2022

இந்த 2022 வருட ஆவக்காய்

பிப்ரவரி மாதத்தில் தேட ஆரம்பித்து எங்குமே மாவடு கிடைக்காத ஏமாற்றம், மார்ச்சில் கிடைத்தது அருமையான உருண்டை மாங்காய்கள், வாங்கி வந்து சுத்தமாக கழுவி, ஈரமில்லாமல் துடைத்து பதினாறு துண்டுகள் போட்டு கல்லுப்பு, வறுத்த வெந்தயம் கடுகு மிளகாய் தூளாக்கி கலந்து நல்லெண்ணெய் ஊற்றி எடுத்து வைத்து இரண்டு நாட்கள் கழித்து ஊறிய பின், ஆஹா அருமை.

ஒரு கிலோ மாங்காய்கள் என்றால்
100 முதல் 150 கிராம் கல்லுப்பு
100-150 கிராம் மிளகாய்த்தூள்
75-100 கிராம் கடுகு தூள்
50 கிராம் வெந்தய தூள்
150-200 மி.லி நல்லெண்ணெய்

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நன்றாக கிளறி விட்டு வைத்தால் இரண்டு வருடங்களுக்கு வைத்து சாப்பிடலாம்.

முயற்சி செய்தால் பலன் உண்டு.



Saturday, 5 September 2020

Lock Down 2020

The Lock Down was announced by the Hon'ble Prime Minister of India on 22 March 2020, subsequently extended till 1st June 2020, in order to protect the people from the scary COVID-19.

During the Lock Down, people were seasoned to live with what they have had and the labourers who were living by their daily wages were the sufferers, but fortunately No hunger death has been reported as noble people, organisations like RSS started to distribute food packages to the people who are suffering.
 
Actually, the Lock Down made people to rearrange their priorities, people started to pay attention to their families, to the pets, to the gardens, to the Social Media platforms and many learnt cooking, mopping, cleaning and the list continuing.

Friday, 22 March 2019

இந்த வருடம் ஆவக்காய்

புளி பொங்கும் மாங்காய் மங்கும் என்ற சொலவடை நினைவில் நின்றாலும் உருண்டையான மாங்காய்களை பார்த்ததும் இதயத்தில் ஏதோவொரு ஜிவ். உடனே மனது கணக்கு போட்டது. ஒரு கிலோ வாங்கினால் எவ்வளவு மிளகாய் வேண்டும், கடுகு எவ்வளவு, உப்பு எவ்வளவு, நல்லெண்ணெய் எவ்வளவு என்று. மிளகாய் தூள் 125 முதல் 150 கிராம், கடுகு தூள் 60 முதல் 75 கிராம் கல்லுப்பு 150 கிராம் முதல் 200 கிராம் இரண்டு தேக்கரண்டியளவு வெந்தயம். அவ்வளவுதான்.
நல்ல உருண்டை காய்களை வாங்கி நன்றாக கழுவி ஈரமில்லாமல் நன்கு துடைத்து எட்டாகவோ பதினாறாகவோ வெட்டி, கடுகு தூள் உப்பு தூள் மிளகாய்த்தூள் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு நாட்கள் காலை மாலையில் நன்கு குலுக்கி மூன்றாவது நாள் சாப்பிட்டு பிறகு சொல்லுங்கள்.எட்டாக வெட்டி போட்டிருந்தால் ஒரு தட்டு தயிர் சாதம் உள்ளே இயங்கும். பதினாறு துண்டாக போட்டிருந்தாலும் முக்கால் தட்டு தயிர் சாதம் இரங்கும். இன்னும் மாங்காய் கிடைக்கிறது, முயற்சி செய்து பாருங்கள்.

Thursday, 21 March 2019

ருசியான மாவடு 2019

வருடாவருடம் கோடைக்காலம் ஆரம்பிக்கும் போதே மாமரங்களை பார்க்க ஆரம்பித்து விடுவது வழக்கம். அவைகள் பூ விட ஆரம்பித்த உடனேயே கையில் பையும் சட்டையில் பணமும் எடுத்து கொண்டு காய்கறி அங்காடிகள் மற்றும் தெரு முனைகளில் மாவடு விற்கும் கடைகளை தேடுவது இயல்பு. இந்த வருடம் மாசிமாதம் பிறந்த உடனேயே ஆண்டார் தெரு முனைக்கடைக்கு சென்று பார்த்தால் ஆச்சரியம். கூடைக்கூடையாக சிறிய உருண்டை வடு. ஒரு படியின் விலையை கேட்டதும் லேசான தலை சுற்றல்.ஆனால் ஆசை யாரை விட்டது. படி 120 ரூபாய்க்கு பத்து படி கிடைத்தது. IPLல் CSKஜெயித்த சந்தோஷம்.
வீட்டிற்கு கொண்டு வந்து பொறுக்கி கழுவி துடைத்து காய வைத்து பிறகு பக்குவமாக விளக்கெண்ணெய் ஊற்றி குலுக்கி கல்உப்பு மிளகாய் தூள் கலந்து இரண்டு நாட்கள் கழித்து எடுத்து அந்த வாசனை.....ஆ‌ஹா அற்புதம்.

Sunday, 1 April 2018

பின்னணி புரியவில்லை


இன்று ஏப்ரல் முதல் நாள் 2018, எங்கள் பகுதியில் காலை முதல் வரிசையாக பல தெரு நாய்கள் இறக்க ஆரம்பித்தன. வீடுகளில் வளர்க்கப்படும் சில நாய்களும் இறந்தன.இன்று எங்கள் வீட்டு நாய்கள் காலைமுதல் வெளியே வராமல் இருந்ததால் உயிர் பிழைத்தன. யாரோ ஒருவர் தெருமுனைகளில் விஷம் கலந்த உணவை வைத்ததை அறியாமல் உண்டு இறந்தன என்று அறிந்ததும் மனம் மிகவும் வேதனை படுகிறது. இரவு 10மணி வரை கிட்டத்தட்ட 10 பெரிய நாய்களும் 7 குட்டி நாய்களும் இறந்ததாக செய்தி. இது போன்ற செயல்கள் குற்றங்கள் நடக்க முன்னேற்பாடாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

மறுபடியும் 07.04.2018 அன்று விஷ உணவை உட்கொண்டு மிச்சம் மீதி இருந்த நாய்களும் இறந்தன. குறிப்பாக எங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று வயதான GSD இறந்தது அனைவரையும் மிகவும் வேதனை பட வைத்த நிகழ்வு.

Sunday, 1 October 2017

ஏன் பிறந்தேன் 10

கோடை விடுமுறை விட்டால் கொண்டாட்டம்தான். ஒரு வருட காலமாக பிரிந்த விடுமுறைக்காலத்தில் மட்டுமே சந்திக்க முடியும். போய்வந்த திருவிழாக்கள் தெப்பங்கள் தேர்கள் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் பெருமையடித்துக் கொள்ளமுடியும். அரவிந்சாமி மாதிரி இவங்க மாடு பால் கறக்குதா அவங்க மாடு கன்னு போட்டுச்சான்னு தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஒவ்வொரு வருஷமும் தவறாமல் சித்திராபெளர்ணமியன்று வண்டியிலோ கால்நடையாகவோ எட்டுக்குடிக்கு சென்று பெரிய பெரிய பலாபழங்கள் வாங்கி வருவோம். மறுநாள் எங்கள் தாத்தா ஒரு பெரிய பாத்திரத்தில் பலாப்பத்தை வெட்டி சுளைகளை போட்டு அதன் மேல் பசுநெய் ஊற்றி பிறகு தேன் ஊற்றி கிளறி எங்கள் அனைவருக்கும் கொடுப்பார். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு விளையாட கிளம்புவோம். 

Friday, 18 August 2017

ஏன் பிறந்தேன் - 9

சதுராக்கினி சுழி அதன் நெற்றியில் ஜொலித்த அழகை சொல்லிக் கொண்டே போகலாம். சுற்று வட்டாரத்தில் அதன் அழகும் வேகமும் மிகவும் ப்ராபல்யம். வேதாரணியம் குண்டு வருவதற்கு முன்பாகவே காயாரோகணம் சம்மன் இருந்தது. அது ரவ்வால் அடித்தால் ஓடுகிற பஸ்ஸும் காரும் நிறுத்தி பார்ப்பார்கள். ஒரு தடவை நாங்கள் பயணம் செய்யும் போது, சுமார் 50 அல்லது 60 கிலோ மீட்டர் வேகம் இருக்கும். ஒரு கண்தெரியா வளைவில் திரும்பும் போது ஒரு பஸ் நல்ல வேகத்தில் சாலையில் வந்து விட்டது.அந்த சம்மன் கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவும் லாவகமாக திரும்பி எங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் சிறிதும் பயமில்லாமல் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றது ஒரு பெரிய அதிசயமாகும். 

Wednesday, 2 August 2017

காளி

சதியின் மூத்தவளே
சக்தி கள் உடையவளே
அகந்தை அழிப்பவளே
ஆதிசித்தனின் திரிசூலமே
இனிமை இல்லாளே
ஈகையும் துறந்தவளே
உயிர்களை எடுப்பவளே
ஊண்சோறு உண்பவளே
ஐம்புலனில் இருப்பவளே
எங்கும் நிறைந்தவளே
ஏற்றங்கள் தருபவளே 
ஒப்பிலா காளி நீயே
ஓங்கார காளி நீயே
ஔடதமாய் இருந்து 
நீயே அனைவரையும்
காத்திடுவாய். 



ஸ்ரீகாளி சதநாம அர்ச்சனை!
பதிவு செய்த நாள்: மார் 20,2015 14:57

ஓம் க்ரீம் ஹ்ரீம் காள்யை நம:
ஓம் க்ரீம் ஸ்ரீம் கராள்யை நம:
ஓம் க்ரீம் க்ரீம் கல்யாண்யை நம:
ஓம் க்ரீம் கலாவத்யை நம:
ஓம் க்ரீம் கமலாயை நம:
ஓம் க்ரீம் கலிதர்பக்நை நம:
ஓம் க்ரீம் கபர்தீச க்ருபான் விதாயை நம:
ஓம் க்ரீம் காளிகாயை நம:
ஓம் க்ரீம் காலமாதாயை நம:
ஓம் க்ரீம் காலாநல சமதுதியை நம:
ஓம் க்ரீம் கபர்தின்யை நம:
ஓம் க்ரீம் கராலாஸ்யை நம:
ஓம் க்ரீம் கருணாம்ருத சாகராயை நம:
ஓம் க்ரீம் க்ருபாமய்யை நம:
ஓம் க்ரீம் க்ருபா தாராயை நம:
ஓம் க்ரீம் க்ருபா பாராயை நம:
ஓம் க்ரீம் க்ருபா கமாயை நம:
ஓம் க்ரீம் க்ருசானுயை நம:
ஓம் க்ரீம் கபிலாயை நம:
ஓம் க்ரீம் க்ருஷ்ணாயை நம:
ஓம் க்ரீம் க்ருஷ்ணாநந்தவிவாதின்யை நம:
ஓம் க்ரீம் காலராத்ர்யை நம:
ஓம் க்ரீம் காம ரூபாயை நம:
ஓம் க்ரீம் காம பாச விமோசின்யை நம:
ஓம் க்ரீம் காதம்பின்யை நம:
ஓம் க்ரீம் கலாதராயை நம:
ஓம் க்ரீம் சுலிமஷ்ஷ நாசின்யை நம:
ஓம் க்ரீம் குமாரி பூஜனப்ரீதாயை நம:
ஓம் க்ரீம் குமாரி பூஜகாலாயை நம:
ஓம் க்ரீம் குமாரி போஜனா நந்தாயை நம:
ஓம் க்ரீம் குமாரி ரூப தாரிண்யை நம:
ஓம் க்ரீம் கதம்பவன சஞ்சாராயை நம:
ஓம் க்ரீம் கதம்பவன வாஸின்யை நம:
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப சந்தோஷாயை நம:
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப மாலின்யை நம;
ஓம் க்ரீம் கிசோர்யை நம:
ஓம் க்ரீம் காலகண்டாயை நம:
ஓம் க்ரீம் கலாநாத நி நாதின்யை நம:
ஓம் க்ரீம் காதம்பரீ பானரதாயை நம;
ஓம் க்ரீம் காதம்பரி ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கபால பாத்ர நிரதாயை நம;
ஓம் க்ரீம் கங்காள மால்ய தாரிண்யை நம:
ஓம் க்ரீம் கமலாஸன சந்துஷ்டாயை நம:
ஓம் க்ரீம் கமலாஸன வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கமலாலய மத்யஸ்தாயை நம:
ஓம் க்ரீம் கமலா மோத மோதின்யை நம;
ஓம் க்ரீம் கலஹம்ஸ கத்யை நம:
ஓம் க்ரீம் கலைப்ய நாஸின்யை நம;
ஓம் க்ரீம் காம ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் காம ரூப க்ருதா வாஸாயை நம;
ஓம் க்ரீம் காமபீட விலாஸின்யை நம;
ஓம் க்ரீம் கமநீயாயை நம;
ஓம் க்ரீம் கலபலதாயை நம:
ஓம் க்ரீம் கமநீய விபூஷநாயை நம;
ஓம் க்ரீம் கமனீய குணாராத்யை நம;
ஓம் க்ரீம் கோமளாங்க்யை நம:
ஓம் க்ரீம் க்ரு சோதர்யை நம:
ஓம் க்ரீம் காரணாம் ருத சந்தோஷாயை நம:
ஓம் க்ரீம் காரணா நந்த ஸித்திதாயை நம;
ஓம் க்ரீம் காரணா நந்த ஜபேஷ்ட்டாயை நம:
ஓம் க்ரீம் காரணார்ச்சன ஹர்ஷிதாயை நம;
ஓம் க்ரீம் காரணார் வசம் மக் நாயை நம:
ஓம் க்ரீம் காரணாவ்ரத பாலின்யை நம:
ஓம் க்ரீம் கஸ்தூரி சௌரமோ போதாயை நம:
ஓம் க்ரீம் கஸ்தூரி திலகோஜ்வலாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரி பூஜன ரதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரி பூஜன ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரி தாஹ ஜனன்யை நம:
ஓம் க்ரீம் கஸ்தூரி ம்ருக தோஷிண்யை நம:
ஓம் க்ரீம் கஸ்தூரி போஜன ப்ரீதாயை நம:
ஓம் க்ரீம் கற்பூர மோத மோதிதாயை நம:
ஓம் க்ரீம் கற்பூர மாலாபரணாயை நம:
ஓம் க்ரீம் கற்பூர சந்தணோஷிதாயை நம:
ஓம் க்ரீம் கற்பூர காரணாஹ்லாதாயை நம:
ஓம் க்ரீம் கற்பூராம்ருத பாயின்பை நம:
ஓம் க்ரீம் கற்பூர சாகரஸ்நாதாயை நம:
ஓம் க்ரீம் கற்பூர சாகரலயாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச பீஜ ஜபப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச ஜாப பராயணாயை நம;
ஓம் க்ரீம் குலினாயை நம;
ஓம் க்ரீம் கௌலிகாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கௌலிக ப்ரிய காரிண்யை நம;
ஓம் க்ரீம் குலா சாராயை நம:
ஒம் க்ரீம் கௌதுகின்யை நம:
ஓம் க்ரீம் குலமார்க்க ப்ரதர்ஸின்யை நம:
ஓம் க்ரீம் காசீஸ்வர்யை நம:
ஓம் க்ரீம் கஷ்ட ஹர்த்திர்யை நம:
ஓம் க்ரீம் காசீச வரதாயின்யை நம:
ஓம் க்ரீம் காசீஸ்வர க்ருதா மோதாயை நம:
ஓம் க்ரீம் காசீஸ்வர மனோ ரமாயை நம:
ஓம் க்ரீம் கலமஞ்ஜீர சரணாயை நம:
ஓம் க்ரீம் க்வணத் காஞ்சி விபூஷணாயை நம:
ஓம் க்ரீம் காஞ்சனாத்ரி க்ருதா காராயை நம:
ஓம் க்ரீம் காஞ்சனா ஜல கௌமுதின்யை நம:
ஓம் க்ரீம் காமபீஜ ஜபானந்தாயை நம:
ஓம் க்ரீம் காமபீஜ ஸ்வரூபிண்யை நம:
ஓம் க்ரீம் குமுதிக்ன்யை நம:
ஓம் க்ரீம் குலி நார்த்தி நாஸின்யை நம:
ஓம் க்ரீம் குல காமின்யை நம:

ஓம் க்ரீம் க்ரீம் ஹரீம் ஸ்ரீம் மந்த்ராவர்ணேன

காலகண்டக காதின்யை நம:wwziwtw

Saturday, 8 July 2017

காளியின் கோபம்

கோபம் என்பது நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களையும்
அழிக்கும் வல்லமை பெற்றது.

கோபத்திலிருந்து வெளிவர என்னதான் வழி?
வழி இல்லாமலா?

ஆயிரமாயிரம் ஆசனங்களும் யோக முறைகளும் நம்மிடையே உள்ளன ஆனால் அது ஏன் எதற்கு என்பதை தெரிந்து கொள்ள நமக்கு நேரமில்லையோ?

  காளியை தெரியுமா?  அவளின் நாக்கு ஏன் வெளியே தொங்குகிறதுப்போல் சித்தரிக்க ப்பட்டுள்ளது?

ஆம். அதுவும் ஒருவகை யோகாசனமே.
பெண்கள் மட்டுமே உற்சாகமாக இருக்கும் போதும் கோபம் வரும் போதும் தங்களின் சுயகட்டுப்பாட்டை கடந்து விடுவார்கள் என்பது ஒரு செய்தி.

  எனவே காளி தன் கோபத்தை குறைக்க தனது நாக்கை வெளியே தொங்க விட்டிருக்கிறாள்.
கோபமென்பது நமது கட்டுபாட்டிற்கு மீறி செல்லும் நேரங்களில் நமது நாக்கை வெளியே தள்ளி உள்ளிழுக்க வேண்டும்,  இப்படி பல முறைகள் செய்தால் கோபம் நமது கட்டுப்பாட்டிற்கு வருவது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம், வயிற்றில் ஏற்படும் அமில மாற்றங்கள் இதயம் நுரையீரல் தசைகள் நரம்புகளில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறையும்.

முயன்று பாருங்கள்

ன்்

Thursday, 6 July 2017

ஏன் பிறந்தேன் - 8

நான்மறைக்காடு என்ற ஊர் நடைபயணமாக குறுக்கு வழியில்

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...